இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே? - பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 05:36 pm
naya-pakistan-must-show-naya-action-against-terror-groups-says-india

தீவிரவாதத்திற்கு ஒருபோதும் பாகிஸ்தான் ஆதரவளிக்காது என்று கூறும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழ்நிலை உருவானது. அப்போது, எல்லையில் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சித்தன. அதில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. 

பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய போது தான் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிக்கொண்டார். பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, அவரை பத்திரமாக இந்திய அரசு மீட்டது. 

இந்நிலையில், எப்-16 விமானம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "தீவிரவாதத்திற்கு ஒருபோதும் பாகிஸ்தான் ஆதரவளிக்காது. பாகிஸ்தான் புதிய பாதையில் பயணிக்கிறது என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கூறுகிறார். உண்மையில் அவரது நிலைப்பாடு அதுவானால் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருகிறது. 

உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எப்16 ரக போர் விமானத்தை வழங்கியது. ஆனால், ஒப்பந்த விதிகளை மீறி தற்போது எப்16- ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட விமான பாகங்களிலுள்ள வரிசை எண், குறியீடு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இது எப்16 ரக போர் விமானம் என்பதை இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த சமயத்தில் 2 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், உண்மையில் ஒரு விமானம் மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டது.  உண்மையாகவே இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதெனில் இரண்டாவது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே இருக்கிறது?

அதுமட்டுமின்றி, பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்திய இடத்தை நேரடியாக காண சென்ற பத்திரிகையாளர்களை பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. இதிலிருந்தே ஏதோ ஒன்றை பாகிஸ்தான் மறைக்க பார்க்கிறது' என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close