மிசோரம்: மதுவிலக்கு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

  முத்துமாரி   | Last Modified : 09 Mar, 2019 05:57 pm
mizoram-cabinet-approves-liquor-prohibition-bill

மிசோரம் மாநிலத்தில் மதுவிலக்கு தொடர்பான மசோதாவுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

மிசோரம் மாநிலத்தில் முதல்வர் சோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், மதுவிலக்கு பற்றியும் பேசப்பட்டது. மதுவிலக்கிற்கு என்று தனியாக மசோதா கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாக அம்மாநிலத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மதுவிலக்கு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 20ம் தேதி தொடங்க இருப்பதையடுத்து, அந்த சமயத்தில் மதுவிலக்கு தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்தின் போது  மிசோ தேசிய முன்னணி கட்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர, மிசோரம் மாநிலத்தில் 1997 -2015 காலகட்டத்தில் பூரண மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் இருந்ததாகவும், அதன்பின்னர் 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close