இரண்டு அல்ல... எல்லையை தாண்டி 3 தாக்குதல்கள்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:01 pm
indian-army-conducted-cross-border-attacks-3-times-not-2-rajnath-singh

5 ஆண்டுகளில் எல்லையை தாண்டி இந்திய ராணுவம், 3 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறிய இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3வது தாக்குதல் ரகசியமானது என்றும் அதை பற்றி இப்போது தான் பேசப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலை குறிப்பிட்டு பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ராணுவம் 3 முறை எல்லையை கடந்து சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

மங்களூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை நாம் எல்லையை கடந்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம். இரண்டு தாக்குதல்களை பற்றி நான் தகவல்கள் சொல்கிறேன். 3வது தாக்குதல் பற்றி சொல்ல முடியாது. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் உரி-யில் தாக்குதல் நடத்தினர். அதற்கு நமது படைகள் பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின்னர் புல்வாமா. 3வது தாக்குதல் பற்றி என்னால் கூறமுடியாது" என்று கூறினார். 

"இனியும் இந்தியா பலவீனமா நாடு கிடையாது" என்றும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close