390 கேன்சர் மருந்துகளின் விலை 87% வரை குறைந்தது!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 09:03 pm
390-cancer-drug-prices-slashed-by-upto-87

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவு உதவுமாறு, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கையால், 390 புற்றுநோய் மருந்துகளின் விலை சுமார் 87% வரை விலை குறைந்துள்ளது.

புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்ந்து வருவதை தடுக்கும் விதமாக, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. பட்டியலில் வராத 42 மருந்துகளின் விலையை கட்டுக்குள் கொண்டு அவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த 42 மருந்துகளை பயன்படுத்தும் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை, 87% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த விலை வணிகர்களும், மருந்து நிறுவனங்களும் அதீத லாபம் சம்பாதிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் ஆண்டுக்கு சுமார் 800 கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும், என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருந்துகளின் புதிய விலை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close