மும்பை தாக்குதலுக்கு காங்கிரஸின் பதிலடி என்ன? பிரதமர் மோடி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 07:45 am
what-is-action-by-congress-for-mumbai-attack-modi-questioned

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு என்ன பதிலடி கொடுத்தது, கேள்வி எழுப்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை, அப்போதைய காங்கிரஸ் அரசு முறையாக கையாளவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,   கடந்த 2016-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய வழிமுறைகளையும், புதிய கொள்கைகளையும் இந்தியா கையாண்டு வருவதாகவும், துல்லியத் தாக்குதல்களின் மூலம் பயங்கரவாதிகளுக்கு அவர்களின் பாணியிலேயே இந்தியா தகுந்த பாடத்தை புகட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் அவர் பேசியதாவது, கடந்த 2008 நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தன. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக போதுமான ஆதாரங்களும் இருந்த நேரத்தில் இந்தியா தகுந்த பதிலடியை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது இருந்த காங்கிரஸ் அரசு, பாதுகாப்புப் படைகளின் கைகளை கட்டிப்போட்டுவிட்டதாக தெரிகிறது என குறிப்பிட்டார்.  மேலும், 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து பயங்கரவாத சம்பவங்களில் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் தொடர்பு உறுதி செய்யப்பட்ட பின்னரும், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.  காங்கிரஸ் அரசு வேகமாகவும், துணிச்சலுடனும் செயல்பட்டு இருந்தால்,  பயங்கரவாத பிரச்னை இந்த அளவுக்கு மேலோங்கி இருக்காது என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close