நீரவ் மோடியை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடுகிறது சிபிஐ

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 11:05 am
cbi-to-move-interpol-to-arrest-nirav-modi-who-staying-in-london

இந்திய வங்கிகளில் கடன் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், நாட்டை விட்டு தப்பியோடி லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் நீரவ் மோடியை கைது செய்ய ‘இன்டர்போல்’ என்னும் சர்வதேச காவல்துறையிடம் சிபிஐ உதவி கோரவுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஊழியர்களின் துணையுடன் முறைகேடாக ரூ.13,000 கோடி கடன் பெற்றதுடன், அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக, வைர வியாபாரியான நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்த நிலையில், பிரிட்டனில் தங்கியிருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தது. அதே சமயம், லண்டன் மாநகர வீதியில் நீரவ் மோடி மிக சுதந்திரமாக உலா வருவதை, அங்கு வெளியாகும் ‘தி டெலிகிராஃப்’ நாளிதழ் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இந்நிலையில், சிபிஐ வட்டாரங்கள் இதுதொடர்பாக கூறியபோது, “நீரவ் மோடி பிரிட்டனில் இருப்பது குறித்து அந்நாட்டு அரசும், இன்டர்போல் அமைப்பும் ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டது. ஆனால், அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. தற்போது நீரவ் மோடியின் தங்குமிடம் தெரிந்திருப்பதால் மோசடி செய்தல், குற்றச்சதி, நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்து ஒப்படைக்குமாறு பிரிட்டன் அரசுக்கும், இன்டர்போல் அமைப்புக்கும் கோரிக்கை வைக்கப்படவுள்ளது’’ என்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close