மக்களவை தேர்தல் எப்போது: இன்று மாலை அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 11:05 am
election-commission-of-india-to-hold-a-press-conference-at-5pm-today

மக்களவை தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தேர்தல் அணையம் அறிவித்துள்ளது. இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர, ஒரிசா, சிக்கிம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. மேலும் தமிழகத்திலும் மிக முக்கியமானதாக கருதப்படும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பிலோ அல்லது அதன் பிறகோ முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close