பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதல் இடஒதுக்கீடு - மத்தியப் பிரதேசத்தில் அவசரச் சட்டம்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 11:04 am
madhya-pradesh-govt-issues-ordinance-to-increase-obc-quota

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 14 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிப்பதற்கான அவசரச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் கவரும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சௌஹான், அந்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதல்வராக இருந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்தது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 50 சதவீத மக்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததே இந்த வெற்றிக்கு காரணம் என்று காங்கிரஸ் கருதியது. அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கியுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 14 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிப்பதற்கான அவசரச் சட்டத்தை, மாநில அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த அவசரச் சட்டத்துக்கு, மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close