மார்ச் 11, 15 தேதிகளில் பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 05:48 pm
president-to-present-padma-awards-on-march-11-and-15th

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இரண்டு விழாக்களில், நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மற்றும் மார்ச் 15ம் தேதிகளில் வழங்குகிறார். 

பிரதமர் மோடியின் தலைமையில், பத்ம விருதுகளுக்கு பொதுமக்களே நேரடியாக பரிந்துரை செய்யலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டதில்  இருந்து, விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டில் 2,200 பேர் என இருந்த பரிந்துரை பட்டியல், இந்த ஆண்டு, 50,000-த்தை கடந்துள்ளது. 

பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 112 பேரில் 56 பேருக்கு நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தை சேர்ந்த மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், ட்ரம்ஸ் சிவமணி உள்ளிட்ட 7 பேருக்கும், தமிழக திரையுலகில் பிரபலமான பிரபுதேவா மற்றும் ஷங்கர் மஹாதேவனுக்கும் பத்ம ஸ்ரீ  விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close