ஏப்ரல் 11 முதல் துவங்குகிறது 2019 நாடாளுமன்ற தேர்தல்!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 05:40 pm
election-commission-announces-2019-election-date

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், 11ம் தேதி முதல் தேர்தல் துவங்க உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதில், 7 கட்டமாக தேர்தல் நடைபெறுவதாகவும், முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி துவங்குவதாவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, 6 மே, 12 மே, 19 மே ஆகிய தேதிகளில் முறையே 2வது முதல் 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

அனைத்து கட்ட தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close