90 கோடி வாக்காளர்கள்; VVPAT இயந்திரம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 05:46 pm
election-commission-press-conference

புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும், அனைத்து வாக்குச்சாவடிகளில் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பள்ளித் தேர்வுகள், பண்டிகைகள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த ஆண்டு 9 லட்சம் வாக்குச்சாவடிகள் செயல்படுத்தப்பட நிலையில், இந்த ஆண்டு அது 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VVPAT வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் அரோரா தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் படிவம் 26-ஐ கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், செய்யாதவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1950 என்ற எண்ணை அழைத்து வாக்காளர்கள் தங்களின் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பூத் ஸ்லிப் மூலம் வாக்களிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close