புல்வாமாவில் ராணுவத்துடன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டை!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 08:33 pm
gunfight-between-security-forces-and-terrorists-in-pulwama

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், சோதனையில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, புல்வாமாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று கிடைத்த ஒரு தகவலை வைத்து, த்ரால் என்ற இடத்தில் உள்ள பிங்கிலிஷ் கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close