அரசியல் கட்சிகளுக்கு மோடி வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 09:00 am
mp-election-pm-modi-wishes-to-all-political-parties

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் வெவ்வேறு கட்சிளை சார்ந்தவர்களாக இருந்தாலும், தேசத்தின் முன்னேற்றம் ஒன்றே நம் எல்லோரின் ஒற்றை குறிக்கோளாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் மீதும், அதன் தலைமையிலான ஆட்சியின் மீதும் நாட்டு மக்களுக்கு இருந்த கோபமே, கடந்த 2014 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அக்கட்சியை படுதோல்வியடைய செய்தது.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும், நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பாஜக மீண்டும் அமோக வெற்றிபெற பொதுமக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். 

முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம்தலைமுறையினர் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியின் பல்வேறு சாதனைகளையும் தமது ட்விட்டர் பதிவில் பட்டியலிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close