பாலகோட் தாக்குதல் தேர்தலுக்காக நடத்தப்பட்டது: பரூக் அப்துல்லா

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 07:22 am
balakot-attack-was-done-for-elections-farooq-abdullah

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் தேர்தலை குறிவைத்து நடத்தப்பட்டதாக பரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொலை செய்யப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-ஈ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதில் விங் கமேண்டர் அபிநந்தன், சிறை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பாலக்கோட்டில், இந்தியா நடத்திய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், தேசிய கான்பரன்ஸ் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பாலகோட் தாக்குதல் தேர்தலை குறிவைத்து நடத்தப்பட்டதாக கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, "பாலகோட் தாக்குதல் தேர்தலுக்காக நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விமானத்தை நாம் இழந்துள்ளோம். விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும்," என்று விமர்சனம் எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close