தீவிரவாதியை ஜி என மரியாதையாக அழைப்பதா?: ராகுலை வறுத்தெடுக்கும் பாஜக!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 04:17 pm
after-rahul-gandhi-s

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் -இ-முகம்மது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "ஜி" என குறிப்பிட்டு, மரியாதையாக அழைத்ததை பாஜக கடுமையாக சாடியுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசும்போது, "புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்தக் கொடூர தாக்குதலை நிகழ்த்தியது ஜெய்ஷ் -இ- முகம்மது தீவிரவாத அமைப்பு. 

இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் ஜி, கடந்த 1999 -ஆம் ஆண்டு, இதே பாஜக ஆட்சியில் தான் பாகிஸ்தானிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தான் அவரை பாதுகாப்பாக விமானத்தில் அழைத்துச் சென்றார்" எனக் கூறினார்.

ராகுல் காந்தி தமது உரையில், மசூத் அசாரை "ஜி" என அழைத்ததை பாஜக தலைவர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

ட்ரெண்டிங்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " பாகிஸ்தானுக்கும், ராகுல் காந்திக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இருவரும்  தீவிரவாதத்தை நேசிப்பவர்கள்" என கேலியாக குறிப்பிட்டுள்ளார். மேலும், #RahulLovesTerrorists என்ற இவரது ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 

What is common between Rahul Gandhi and Pakistan?

Their love for terrorists.

Please note Rahul ji’s reverence for terrorist Masood Azhar - a testimony to
#RahulLovesTerrorists pic.twitter.com/CyqoZ7b9CF

— Smriti Z Irani (@smritiirani) March 11, 2019 ">http://

 

என்னாச்சு காங்கிரஸுக்கு?: மற்றொரு மத்திய அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "முன்பு ஒருமுறை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஒசாமா பின்லேடனை ஒசாமா ஜி என்றும், ஹபீஸ் சையதை, ஹபீஸ் சையது சாப் எனவும் மரியாதையாக அழைத்தார். தற்போது மசூத் அசாரை ராகுல் காந்தி "ஜி" என மரியாதையாக அழைத்துள்ளார். என்ன ஆனது காங்கிரஸுக்கு? என கலாய்த்துள்ளார்.

 

Come on “Rahul Gandhi Ji”!

Earlier it were the likes of Digvijay Ji who called “Osama Ji” and “Hafiz Saeed Sahab”.

Now you are saying “Masood Azhar Ji”.

What is happening to Congress Party?
pic.twitter.com/fIB4FoOFOh

— Ravi Shankar Prasad (@rsprasad) March 11, 2019 ">http://

 

கடந்த 1999-ஆம் ஆண்டு, கந்தகாரில் ஏர்-இந்தியா விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, அதில் பயணித்த விமானப் பயணிகள் பணைய கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

 அவர்களை தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்க,  இந்தியாவில் சிறையிலிருந்த ஜெய்ஷ் -இ -முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய பாஜக அரசு விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close