மாயாவதிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ரெய்டு... ரூ.100 கோடி மோசடியா?

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 05:10 pm
rs-100-crores-tax-evasion-mayawati-s-secretary-raided

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி பதவி வகித்தபோது அதில் முக்கிய பங்காற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி நேத்ராமின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரி நேத்ராம், சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி மற்றும் உ.பி தலைநகர் லக்னோவில் 12 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. 

1979ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த நேத்ராம், மாயாவதி முதல்வராக பதவி வகித்த காலங்களில், பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றியிருந்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக நேத்ராம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிறிந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close