காங்கிரஸை கலைக்க மஹாத்மா காந்தி விரும்பினார்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 06:33 pm
gandhiji-wanted-congress-to-be-disbanded-pm-modi

தண்டி யாத்திரை நினைவு நாளான இன்று, பிரதமர் நரேந்தரை மோடி எழுதிய ஒர் டிவிட்டர் பதிவில், "காங்கிரஸ் கலாச்சாரத்தை தெரிந்து தான் மஹாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என விரும்பினார்" என்று எழுதியுள்ளார்.

1930ம்  ஆண்டு மஹாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரையின் 89வது நினைவு தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, இணையத்தளத்தில் ஒரு பிளாக் பதிவை வெளியிட்டார்.

அதில், மஹாத்மா காந்தியின் கோட்பாடுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். "மஹாத்மா காந்தி பலமுறை, சமத்துவமின்மை, இனப்பிரிவினை மீது நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸ் சமூகத்தை பிரிக்க என்றுமே தயங்கியதில்லை. நாட்டிலேயே மிக மோசமான இன கலவரங்கள் மற்றும் தலித் எதிர்ப்பு படுகொலைகள் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்துள்ளது" என்று பிரதமர் மோடி எழுதியுள்ளார். 

தவறான ஆட்சிமுறையும், ஊழலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று காந்தி கூறியதாகவும் மோடி எழுதியுள்ளார். மேலும், "காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் தெரிந்ததால் தான், காந்திஜி காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என விரும்பினார்" என்றும் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close