இந்தியாவில் இனி போயிங் ரக விமானங்கள் பறக்காது!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 02:31 pm
boeing-737-max-8-aircraft-banned-in-indian-airspace-dgca

போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானங்களை இயக்க, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

எத்தியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அதில் பயணித்த 157 பேரும் பலியாகினர். இதையடுத்து விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் வர்த்தக ரீதியான பயன்பாட்டை சீனா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் நிறுத்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவிலும் இந்த குறிப்பிட்ட வகை விமானத்தின் போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

"பயணிகளின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை 4 மணியிலிருந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானங்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது" எனவும் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுளள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தமது ஐந்து போயிங் 737 ரக விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது.

இதேபோன்று, தமது 13 போயிங் ரக விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அதற்கான டிக்கெட் கட்டணத்தையும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு உலக அளவில் அதிகம் விற்பனையாகி வரும் பயணிகள் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close