பொக்ரானில் 'பினாகா' ராக்கெட்டின் 3வது சோதனை வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 04:52 pm
pinaka-missile-test-fired-at-pokhran

ராஜஸ்தான் பொக்ரானில் நவீன பினாகா ராக்கெட் 3வது சோதனை நேற்று வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. 

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘பினாகா’ ராக்கெட் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் இரு ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும், அவை 90 கிமீ தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பொக்ரானில் நடைபெற்ற பினாகா ராக்கெட்டின் 3வது சோதனையும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. கார்கில் போரில் பினாகா ராக்கெட்டுகள் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close