19-ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: தேர்தல் ஆணையம் அனுமதி !

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 07:22 am
election-commssion-permitted-gst-council-meeting

பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 19-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில், அவ்வப்போது கூடி ஜி.எஸ்.டி. குறித்து விவாதித்து பல்வேறு முடிவுகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த கவுன்சிலின் 34-வது கூட்டம் வரும் 19-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டதால்,  19-ந்தேதி நடைபெறவிருந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டி இருந்தது.  

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பப்பட்டது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது. அனுமதி அளித்ததையடுத்து, இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close