அயோத்தி விவகாரம்: சமரச குழு பேச்சுவார்த்தை தொடங்கியது !

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 07:34 am
ayodhya-issue-compromise-meeting

அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த சமரசக் குழு, பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. 

அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, மூன்று நபர் சமரச குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி நியமித்தது.  உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த சமரசக் குழுவில் உறுப்பினர்களாவர். 

ஒரு வாரத்துக்குள் சமரச பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும், எட்டு வாரங்களுக்குள் அதனை முடித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதனையடுத்து,சமரச பேச்சுவார்த்தைக்காக நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் குழுவினர் நேற்று அவாத் பல்கலைக்கழகத்தில் சமரச பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். வழக்கின் 25 மனுதாரர்கள் தங்கள் வழக்கறிஞர்களுடன் சமரச குழு முன் ஆஜராகினர். இந்த பேச்சுவார்த்தை இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. 

சமரச பேச்சுவார்த்தையையொட்டி, அவாத் பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், அயோத்தி வழக்கின் மனுதாரர்களுக்கும், அவர்களது வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், பைசாபாத் மாவட்ட நிர்வாகத்துக்கு சமரசக்குழுவினர் அறிவுறுத்தியிருந்ததையடுத்து, நேற்று அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் சமரசக்குழு முன் ஆஜராவோரை தவிர வேறு எவரும், பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close