நாடு முழுவதும் 89,78,11,627 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் 

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 08:18 am
89-78-11-627-voters-in-india-election-commssion

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் 2019-ஆம் ஆண்டின் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் வாக்காளர்கள் பட்டியலில் 89 கோடியே 78 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில்,  தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் 2019-இல்  வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் மொத்தம் 10 லட்சத்து 35 ஆயிரத்து 919 வாக்குச் சாவடிகள் உள்ளதாகவும், பொது வாக்காளர்கள் 89 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 899 பேர் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறுனுடன்கூடிய பொது வாக்காளர்கள் 45 லட்சத்து 63 ஆயிரத்து 905 பேரும், வெளிநாட்டில் உள்ள இந்திய  வாக்காளர்கள் 71,735 பேரும், பணி வாக்காளர்கள் 16 லட்சத்து 62 ஆயிரத்து 993 பேரும்  உள்ளனர். 2019-க்கான வாக்காளர்கள் பட்டியலில் மொத்தம் 89 கோடி 78 லட்சத்து 11 ஆயிரத்து 627 பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close