போர் விமானங்களுடன் வந்து படம் காட்டிய பாகிஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 01:33 pm
pakistan-war-planes-attempt-along-loc-find-by-radars

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே பாகிஸ்தானின் போர் விமானங்கள் நேற்றிரவு பறந்துள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்கு அப்பால் பறந்த அந்த விமானங்கள் இந்திய பகுதிக்குள் நுழையவில்லை.

பாகிஸ்தான் விமானங்கள் எல்லை அருகே பறந்து கொண்டிருப்பதை இந்திய ரேடார்கள் படம் பிடித்தன. அதே சமயம், இந்திய விமானப் படையும், பாதுகாப்புப் படையினரும் கடந்த மாதம் முதலே உஷார் நிலையைக் கடைப்பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குள் கடந்த மாதம் 26ம் தேதி நுழைந்த இந்திய போர் விமானங்கள், அங்கிருந்த தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தன. அதற்குப் பதிலடியாக, அதிநவீன எஃப்-16 போர் விமானத்தை எடுத்துக் கொண்டு இந்திய வான் பகுதியில் பாகிஸ்தான் ஊடுறுவியது. அதை இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அந்த சண்டையின்போது, இந்தியாவின் மிக்-17 ரக விமானமும் வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த விமான அபிநந்தன், பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close