ராணுவத்தளபதிக்கு 'பரம் விசிஷ்ட் சேவா' பதக்கம்! குடியரசுத்தலைவர் வழங்கினார்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 05:23 pm
army-chief-receives-param-vishisht-seva-medal-from-president-kovind

சிறந்த சேவையாற்றியதற்காக, இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்திற்கு உயரிய 'பரம் விசிஷ்ட் சேவா' பதக்கத்தை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த். 

இந்திய ராணுவப்படையில் அமைதிக்காக பணியாற்றியவர்களுக்கு மிக உயரிய பதக்கமான  'பரம் விசிஷ்ட் சேவா' கடந்த 1980ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி பிபின் ராவத்திற்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவருக்கு இந்த பதக்கத்தை வழங்கினார். 

அதே போன்று சிப்பாய் வரஹ்ம பால் சிங், சி.ஆர்.பி.எப் வீரர்கள் ராஜேந்திர நயின், ரவீந்திர பபான் ஆகியோருக்கு 'கீர்த்தி சக்ரா' பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மேலும் 15 பேருக்கு ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிமைக்கு 'சௌர்ய சக்ரா' பதக்கங்கள் வழங்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close