இன்று உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் !

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 10:59 am
today-world-consumer-rights-day

பொது மக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக "உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம்" ஆண்டுதோறும் மார்ச் 15ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

1986ஆம் ஆண்டு டிசம்பார் மாதம் 24ஆம் தேதி, இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டது முதல் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் பயனாளிகள் விரைவாக தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனை மக்கள் தெரிந்துகொள்ளவும், பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. 

தரக்குறைவான பொருட்கள் விற்பனை, உண்மைக்கு மாறன விளம்பரங்கள், மூலம் விற்பனை செய்வது உள்ளிட்டவைகளால் பயனாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உரிமைகளை மக்கள் அறிந்து கொள்ளவே "உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம்" ஆண்டுதோறும் மார்ச் 15ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
தொடர்புடைய செய்திகள் :
Advertisement:
[X] Close