துறை ரீதியான விசாரணை நிறைவு - விடுமுறையில் செல்கிறார் அபிநந்தன்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:36 am
abhinnandhan-to-go-on-sick-leave-for-few-weeks-iaf-sources

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய அபிநந்தனிடம் இந்திய விமானப்படை மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட துறை ரீதியான விசாரணை நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சில வாரங்கள் அவர் விடுமுறையில் செல்லவிருக்கிறார்.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26ம் தேதி குண்டுவீசி அழித்தது. இதையடுத்து, இந்திய வான்பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவின. அவ்வாறு வந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை துரத்திச் சென்று இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அந்த சண்டையின்போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் கடந்த மாதம் 27ம் தேதி பாகிஸ்தானில் பிடிபட்டார். அடுத்த இரண்டு நாட்களில் விடுதலை செய்யப்பட்ட அவர், கடந்த 1ம் தேதி நாடு திரும்பினார்.

முதலில், அபிநந்தன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு முழுமையான மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்றன. அதற்கு அடுத்தபடியாக, நாடு திரும்பும் போர் கைதிகள், தங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற வகையில், தனக்கு நடந்தவற்றை இந்திய விமானப் படை அதிகாரிகளிடம் அபிநந்தன் விவரித்து வந்தார். அந்த நடைமுறைகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதையடுத்து, ஒரு சில வாரங்கள் அபிநந்தன் விடுமுறையில் செல்லவுள்ளார். விடுமுறைக்கு பின்னர், மீண்டும் உடல் தகுதிக்கான மருத்துவ பரிசோதனை செய்த பின், போர் விமானியாக அவர் பணியில் சேரவுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close