காஷ்மீரில் கிராமவாசி சுட்டுக்கொலை - தீவிரவாதிகள் காரணமா?

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 01:13 pm
gunman-killed-civilian-in-jammu-kashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கிராமவாசி ஒருவரை, கடத்திச் சென்று மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். இது தீவிரவாத நடவடிக்கையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் மண்டலத் தலைவர் முகம்மது இஸ்மாயிலை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில், படுகாயமடைந்த அவர், ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தோக்ரிபோரா கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அகமது லோனே என்ற கிராமவாசியை மர்ம நபர் கடத்திச் சென்றார். இந்நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லபப்ட்ட நிலையில் மன்சூரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close