பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 03:34 pm
green-crackers

மார்ச் 21 -ஆம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் வணிகக் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

பட்டாசுகள் உற்பத்தி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம், 'நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை; ஆனால் சில நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க வேண்டும்' என தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இன்று டெல்லியில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களுடன் மத்திய தொழில் துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, குறைந்த அளவு பேரியம் உபயோகித்து பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் வணிகக் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குறைந்த அளவு பேரியம் பயன்படுத்தி, மார்ச் 21-ஆம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், முன்னதாக இருந்ததைவிட பட்டாசு உற்பத்தி/உபயோகத்தினால் ஏற்படும் மாசு அளவு குறைக்கப்படும். மேலும், மார்ச் 30-ஆம் தேதியில் இருந்து முழுமையாக அனைத்து பகுதிகளிலும் பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்றார். 

தமிழகத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டப்பகுதிகளில் முக்கிய தொழிலாக இருக்கும் பட்டாசு உற்பத்தி கடந்த பல மாதங்களாக முடங்கியதில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. 

பட்டாசு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close