அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு: இடைத்தரகர் தீபக் தல்வாரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 04:23 pm
agusta-westland-case-delhi-s-patiala-house-court-allows-ed-to-interrogate-lobbyist-deepak-talwar

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கில், சிறை விதிமுறைகளின்படி, தீபக் தல்வாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. 

அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. அகஸ்டாவெஸ்ட் லேண்ட் என்ற வெளிநாட்டு தனியார் விமான நிறுவனத்திடம் இருந்து, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் ரூ.423 கோடி பணமோசடி நடைபெற்றுள்ளது. 

இந்த வழக்கில், இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, இடைத்தரகர்கள் ராஜீவ் சக்சேனா, சக்சேனாவின் மனைவி ஷிவானி, கிறிஸ்டியன் மிஷெல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு இடைத்தரகரான தீபக் தல்வாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. அவரிடம் திங்கட் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விசாரணை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியன் ஏர்லைன்ஸ் - அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் தீபக் தல்வார். இந்த ஒப்பந்தத்தில்  வெளிநாட்டு நிறுவனத்திடம் தீபக் தல்வார் மூலமாகவே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close