PUBG விளையாடிய 16 மாணவர்கள் கைது!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 04:27 pm
16-arrested-for-playing-banned-pubg

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான கேமாக உருவெடுத்துள்ள PUBG மீது குஜராத் போலீசார் தடை விதித்த நிலையில், 16 மாணவர்கள் அந்த கேமை விளையாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

'பிளேயர் அன்னோன் பேட்டில்கிரவுண்ட்' இதன் சுருக்கமே PUBG. ஆன்லைனில் நூற்றுக்கணக்கானோருடன் ஓரே நேரத்தில் நடக்கும் போர் போல இந்த கேம் அமைக்கப்பட்டிருக்கும். விளையாடுபவர் அணியில் 3 பேர் இருப்பார்கள். அங்கங்கே கிடைக்கும் ஆயுதங்களை எடுத்து, எதிரிகளை சுட்டுக் கொல்ல வேண்டும். சர்வதேச அளவில் மிக பிரபலமான இந்த கம்ப்யுட்டர் கேம், மொபைல்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர், கோடிக்கணக்கானோர் இதை மொபைல்களிலும் விளையாடத் துவங்கினர். முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே இந்த கேம் பிரபலம். 

ஆனால், இந்த கேம் இளைஞர்களை அடிமைப்படுத்தி வைப்பதாகவும், சோம்பேறி ஆக்கி விடுவதகாவும் பலர் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், இந்த கேமை தடை செய்ய வேண்டும் என்றும் சில குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பல நகரங்களில் இந்த கேமை விளையாட தடை விதிக்கப்பட்டது. தேர்வு நேரங்களில் மாணவர்களை அடிமைப்படுத்துவதாக கூறி, குஜராத்தின் ராஜ்கோட் போலீசார் PUBG கேமை தடை செய்த நிலையில், நேற்று கேம் விளையாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று மேலும் 6 பேர் PUBG கேம் விளையாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் போலீசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கேம் விளையாடியதற்கு தடையா?" என சமூக வலைத்தளங்களில் குஜராத் போலீசாரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close