அவர் ஒன்னும் பெரிய ஆள் இல்ல...மூத்த தலைவரை தூக்கியெறிந்த ராகுல்!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:54 pm
no-no-vadakkan-isn-t-a-big-leader-rahul-gandhi

காங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர்  டாம் வடக்கனை, "அவர் அப்படியொன்றும் பெரிய தலைவர் இல்லை" எனக் கூறி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே வார்த்தையில் அவரை தூக்கியெறிந்துள்ளார்.

 25 ஆண்டுகளுக்கு மேலாக, காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவரும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான டாம் வடக்கன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் நேற்று இணைந்தார்.

புல்வாமாவில் நிகழ்ந்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதத்தில், பாலகோட்டில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய அதிரடி தாக்குதலை காங்கிரஸ் விமர்சித்து வருவது தமக்கு பிடிக்கவில்லை என, அக்கட்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை தன்நிலை விளக்கமாக டாம் வடக்கன் அளித்திருந்தார்.

இந்த நிலையில், வடக்கன் கட்சியிலிருந்து விலகியது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தியிடம் மும்பையில் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.

அதற்கு , " இல்லை... இல்லை... டாம் வடக்கன் அப்படியொன்றும் பெரிய தலைவர் இல்லை" என்று ராகுல் அலட்சியமாக பதிலளித்தார்.

பாஜகவில் இணைந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, தனது அன்னையான சோனியாவின் அரசியல் ஆலோசகராக இருந்த மூத்த தலைவர் ஒருவரையே, ராகுல் காந்தி இப்படி ஒரே வார்த்தையில் தூக்கியெறிந்துள்ளது அரசியல் நாகரிகமான செயல்பாடா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த வடக்கன், காங்கிரஸில் இருந்து விலகியுள்ளது, தேர்தல் நேரத்தில் அக்கட்சிக்கு அங்கு பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close