மீண்டும் பீமா கொரேகான் - பீம் ஆர்மி தலைவர் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 07:20 pm
will-repeat-bhima-koreagaon-again-bhim-army-chief

அரசியல் சாசனத்துடன் விளையாடினால் மீண்டும் பீமா கொரேகான் நடத்துவோம் என பீம் ஆர்மி-யின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு பீமா கொரேகான் நினைவேந்தலின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அம்பேத்கர் பெயரில் நடத்தப்படும் பீம் ஆர்மி என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், புதுடெல்லியில் ஜந்தர் மந்தரில் இன்று ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் பேசிய ஒரு வீடியோ வெளியானது.

அதில் அவர், மீண்டும் பீமா கொரேகான் நிகழ்த்த வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் வெமுலா தற்கொலை உள்ளிட்ட பல்வேறு தலித் கொடுமை சம்பவங்களை குறிப்பிட்ட சந்திரசேகர் ஆசாத், "அரசியல் சாசனத்தில் விளையாட நினைத்தால் மீண்டும் பீமா கொரேகான் நடத்துவோம்" என்று கூறினார். அவரது இந்த பேச்சு, கலவரத்தை தூண்டுமாறு உள்ளதாக பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. 

இரு தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசாத்தை, உ.பி காங்கிரஸ் பொருளாளர் ப்ரியங்கா காந்தி சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close