நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் ஹைதராபாத்தை சேர்ந்தவர் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 10:19 pm
hyderabad-man-shot-in-new-zealand-massacre

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 49 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஹைதராபாத்தை  சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று இரண்டு மசூதிகளுக்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 49 பேர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், ஒரு இனவெறி தாக்குதல் என்று நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை குற்றவாளி நேரடியாக படம்பிடித்து, ஒளிபரப்பியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த அகமது ஜஹாங்கீர் என்பவர், அல் நூர் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்றிருந்தார். அப்போது, துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து, இந்தியாவில் வசிக்கும் ஜஹாங்கீரின் சகோதரர் குர்ஷீத் இக்பால் பேசும்போது, "என்னுடைய சகோதரரின் நெஞ்சில் சூடப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதை ஒரு வீடியோ மூலம் நான் தெரிந்து கொண்டேன்" என்று கூறினார்.

15 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் அகமது ஜஹாங்கீர், அல் நூர் மசூதிக்கு அருகே ஒரு ஹைதராபாதி உணவகத்தை நடத்தி வருகிறார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close