332 கோடி ஹெராயின் பறிமுதல்; 10 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 10:34 pm
delhi-police-arrest-10-people-with-rs-332-crore-worth-of-heroin

தலைநகர் புதுடெல்லியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 332 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.

புதுடெல்லியில் ஹெராயின் போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த தகவல்களை வைத்து, டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மிகப்பெரிய அளவில் ரூ.332 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதற்கு முன், டிசம்பர் மாதம் டெல்லி போலீசார் நடத்திய சோதனையில், 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய சேர்ந்த சிலரும் இதில் கைது செய்யப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close