நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு - பிரதமர் மோடி கண்டனம் !

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:45 am
mosque-fire-pm-modi-letter-to-newzealand-pm

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு  கடிதம் எழுதியுள்ளார். 

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் உயிரிழந்தது குறித்து அறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார் எனவும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளை அளிக்க தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close