ஆந்திர எல்லை அருகே 2 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 09:57 am
two-naxals-killed-in-an-encounter-in-andhra

ஆந்திர எல்லை அருகே இன்று சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கும், நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 2 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பேடபயலு(Pedabayalu) என்ற இடத்தில் நக்சல்கள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து  சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் ஆந்திர போலீசார் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும், தீவிரவாதிகள் பதிலுக்கு சுட்டதில் ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் படுகாயமடைந்தார். தொடர்ந்து  நக்சல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close