உத்தரபிரதேச பா.ஜ.க எம்.பி மீண்டும் சமாஜ்வாதியில் இணைந்தார்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 04:03 pm
allahabad-mp-shyama-charan-gupta-joins-sp

உத்திரபிரதேச மாநிலம் 'பிரயாக்ராஜ்' தொகுதி பா.ஜ.க எம்.பி ஷ்யாம சரண் குப்தா பாஜகவிலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். இவர் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 'பண்டா' தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். 

முன்னதாக இவர், 1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில்  'பண்டா' தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் தோல்வியுற் நிலையிலும், அடுத்ததாக 2004 ஆம் ஆண்டு வெற்றி பெற்று அத்தொகுதியின் எம்.பி ஆனார். 

பின்னர் 2009ம் ஆண்டு போல் 'புல்பூர்' தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2014ம் ஆண்டு பா.ஜ.க சார்பில் அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதையடுத்து தற்போது பா.ஜ.கவில் இருந்து விலகி மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார் எஸ்.சி.குப்தா. 2019 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் 'பண்டா' தொகுதியில் இவர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோன்று அசாம் மாநிலத்தில் பா.ஜ.க எம்.பி சர்மாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close