ஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லி-க்கு விருது வழங்கிய மன்மோகன் சிங்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 04:52 pm
manmohan-singh-presents-arun-jaitlet-with-award-for-gst

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக, நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, பிஸ்னஸ்லைனின் பத்திரிகையின் விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்தியாவில் வெற்றிகரமாக ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியதற்காக நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பிஸ்னஸ்லைன் பத்திரிகை விருது வழங்கியது. இந்த விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜெட்லிக்கு வழங்க, ஜிஎஸ்டி கவுன்சிலின் சார்பாக, அமைச்சர் ஜெட்லி பெற்றுக்கொண்டார். 

இந்த விருதை, 377 பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரர்களும் பகிர்ந்து கொண்டனர். ஒருபால் ஈர்ப்பை கிரிமினல் குற்றமாக்கிய 377 பிரிவு சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

விருதை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ராகுல் காந்தியை விமர்சிக்குமாறு ட்வீட் செய்யப்பட்டது. அதில், ஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லிக்கு, மன்மோகன் சிங் விருது வழங்கியதை குறிப்பிட்டு, "கப்பர் சிங் வரியா, ராகுல் காந்தி?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. காங்கிரஸ் தரப்பில் இருந்து ஜிஎஸ்டி வரிக்கு எதிராக தொடர்ந்து எழுப்பப்பட்ட விமர்சனம் 'கப்பர் சிங் டேக்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close