ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 06:30 pm
jammu-kashmir-police-woman-shot-dead

ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் பகுதியில், சிறப்பு காவல் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை, தீவிரவாதிகள் அவரது இல்லத்திற்கு அருகே வைத்து சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் பகுதியில், சிறப்பு காவல் படையை சேர்ந்த குஷ்பூ ஜன் என்ற பெண் போலீஸ், வெஹில் என்ற தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அவரது இல்லத்திற்கு அருகே வைத்து, தீவிரவாதிகள் குஷ்பூவை சரமாரியாக சுட்டனர். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் பாதுகாப்பு படையினருக்கு உதவியாக மாத சம்பளத்திற்கு சிறப்பு காவல் படையை நடத்தி வருகிறது. போலீஸ் கான்ஸ்டபிகளுக்கும் கீழ் வரும் சிறப்பு காவல் படை வீரர்களுக்கு, ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியை வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close