இனி SBI ஏடிஎம்களில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 08:37 pm
no-need-debit-card-for-sbi-atms

எஸ்பிஐ நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு தனது ஏடிஎம்களில் வழங்க இருக்கிறது.

டெபிட் கார்டு திருட்டு, மோசடி உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக, எஸ்பிஐ நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், ஏடிஎம்களில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக எஸ்.பி.ஐ YONO ஆப் மூலம் ஒரு OTP உருவாகும் என்றும், அந்த OTP-யை ஏடிஎம்களில் பதிவு செய்யும்போது, பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையை தற்போது நாட்டின் 16,500 ஏடிஎம்களில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், தொடர்ந்து அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 60,000 ஏடிஎம்களில் அறிமுகப்படுத்தப்படும், என்று எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இதே தொழில்நுட்பத்தை கேஷ் டிஸ்ட்ரிபியூஷன் பாயிண்ட்களுக்கும் கொண்டு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு ஆண்டில், இந்த தொழில்நுட்பத்தை பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கேஷ் பாயிண்டுகளில் கொண்டுவருவோம், என்றும் ராஜ்னிஷ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், எஸ்.பி.ஐ-யின் YONO ஆப் பயன்படுத்துவோருக்கு 6 எண்கள் கொண்ட OTP வழங்கப்படும். அருகே இருக்கும் ஏதாவது ஒரு எஸ்பிஐ ஏடிஎம்-மிற்கு சென்று, வாடிக்கையாளர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக YONO பின்னை அழுத்தி, அதன் பின், OTP-யை அழுத்தினால், பணம் எடுத்துக் கொள்ள முடியும். ரூ.10,000 வரை மட்டுமே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. தற்போது YONO-வை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோக, SBI Anywhere என்ற ஆப்பை ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்களையும் விரைவில் ஒருங்கிணைக்க உள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு, இந்த சேவையை டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளதாகவும், அதன் மீதான வரவேற்ப்பை பார்த்துவிட்டு, க்ரெடிட் கார்டுகளுக்கும் இதை விரிவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close