முன்னாள் சத்தீஸ்கர் முதல்வரின் மருமகன் மீது ரூ.50 கோடி மோசடி வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 03:03 am
fmr-chhattisgarh-cm-s-son-in-law-book-for-rs-50-crore-fraud

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமன் சிங்கின் மருமகன், அம்மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூபாய் 50 கோடி அளவில் மோசடி செய்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு வரை முதல்வராக பணியாற்றி வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராமன் சிங்கின் மருமகன் புனித் குப்தா, தலைநகர் ராய்ப்பூரில் உள்ள டிகேஎஸ் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது கீழ் இந்த மருத்துவமனையில் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு தேவையில்லாத பொருட்களையும், மெஷின்களையும் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரைத் தொடர்ந்து மருத்துவமனையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட கமல் கிஷோர் சஹாரே,  காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் புனித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்ற முறைகேடுகள் குறித்து புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அரசு ஒரு விசாரணை கமிட்டியை நியமித்ததாகவும், அந்த கமிட்டி அளித்த அறிக்கையின் பேரில், புனித் உள்ளிட்ட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் சஹாரே தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close