நியூஸிலாந்து மசூதியில் கொல்லப்பட்டவர்களில் 5 பேர் இந்தியர்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 09:58 am
5-indians-among-the-50-dead-people-in-new-zealand-mosque

நியூஸிலாந்தின் கிரைஸ்டுசர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியான 50 பேரில், 5 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. நியூஸிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் இத்தகவலை உறுதி செய்துள்ளது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மசூதிகளில் புகுந்து மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவரை நியூஸிலாந்து காவல்துறையினர் கைது செய்தனர். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் என்பது தெரியவந்தது. அதே சமயம், தாக்குதலில் சிலர் இந்தியர்களும் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகம் நிலவியது. தற்போது இந்திய தூதரகம் அதை உறுதி செய்துள்ளது.

மசூதி மீதான தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளார்கள் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர்களது பெயர்கள் மெஹபூப் கோஹர், ரமீஸ் வோரா, ஆசிஃப் வோரா, அன்சி அலிபாவா, சையர் காதிர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close