2025-இல் இந்தியாவுடன் பாகிஸ்தான் இணைந்திருக்கும் - ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 09:57 am
pakistan-will-be-part-of-india-in-2025-rss-leader-indresh-kumar

வரும் 2025-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஓர் அங்கமாக பாகிஸ்தான் இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல ‘அகண்ட பாரதம்’ அமையும் என்றார் அவர்.

மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்திரேஷ் குமார் பேசியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு முதல்முறையாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அரசியல் சாதூர்யத்துடன் ராணுவம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அங்கு அரசியல் நிலவரம் மாறியிருக்கிறது. இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து 5 முதல் 7 ஆண்டுகளில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி போன்ற பகுதிகளில் நீங்கள் வீடு வாங்கலாம் அல்லது தொழில் தொடங்கலாம். ஆகவே, லாகூரில் குடியேறுவது குறித்து நாம் கனவு காணலாம். 1947 முன்னதாக பாகிஸ்தான் என்பதை கிடையாது. 1945-இல் அது ஹிந்துஸ்தானின் அங்கமாகவே இருந்தது. 2025-இல் மீண்டும் ஹிந்துஸ்தானின் அங்கமாக மாறும். ஐரோப்பிய யூனியனைப் போல அகண்ட பாரதம் என்ற பெயரில் பாரத ஒன்றியம் அமையும் என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close