இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ: ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 06:24 pm
fire-in-ioc-refinery-in-haryana-1-dead

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையம், ஹரியானா மாநிலம் பானிபட்டில் இயங்கி வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக, நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டது. அப்போது எரிவாயு கசிந்து, தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் சுத்தீகரிப்பு நிலையத்தில் குவிந்தனர். அப்போது உள்ளே சிக்கிக் கொண்ட ஒரு ஊழியர் பலியானார். அவர் சோனிபட் பகுதியை சேர்ந்த 22 வயதேயான மோகன்லால் என தெரிய வந்துள்ளது. மேலும், 2 பேர் இதில் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்க உட்கட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close