கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 09:44 pm
goa-cm-manohar-parrikar-passes-away

கோவா மாநில முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார். 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முதல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 63 வயதான அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமானதாக கூறப்பட்டது. அவரது இல்லத்தில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று மாலை அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

 

பாரிக்கரின் மறைவையொட்டி, மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.

கோவா மாநிலம், மபுசாவில் கடந்த 1955 -ஆம் ஆண்டு பிறந்த மனோகர் பாரிக்கர், 1978- இல் மும்பை  ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவராவார். கோவா மாநில முதல்வராக  மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close