தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 09:22 am
anil-ambani-thanks-mukesh-ambani-as-rcom-clears-rs-550-crore-dues-with-ericsson

எரிக்சன் நிறுவனத்திற்கு தனது ஆர்காம் நிறுவனம் தரவேண்டிய ரூ.550 கோடி கடனில், முக்கால்வாசியை திருப்பிக் கொடுத்த சிறைத்தண்டனையில் இருந்த தன்னை காப்பாற்றிய தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.

சுவீடனை தலைமையிடமாக கொண்ட எரிக்சன் தொலைத்தொடர்பு நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தரவேண்டிய 550 கோடி ரூபாயை ரிலையன்ணஸ் நிறுவனம் தராமல் நிலுவையில் வைத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

த் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க 2014ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ஆர்காம் நிறுவனம் தர வேண்டி இருந்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ஆர்காம் நிறுவனத்துக்கு 120 நாட்கள் அவகாசத்தை அளித்தது. அதாவது செப்டம்பர் 30ம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.

ஆனால், அந்த தேதி முடிவடைந்த நிலையில் ஆர்காம் நிறுவனம் சார்பில் அந்தத் தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்தவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆர்காம் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, மற்ற இரு அதிகாரிகள் மீது தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களும் குற்றவாளி என அறிவித்தது. மேலும், 4 வார காலத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிடில், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுப் படி வரும்  மார்ச் 19ம் தேதிக்குள்  எரிக்சன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் வழங்காவிட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய  நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டார்.  

அவருக்கு அளித்த கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது.  இதனையடுத்து நேற்றிரவு ரிலையன்ஸ் குழுமம், எரிக்சனுக்கு செலுத்த வேண்டிய, 459 கோடி ரூபாயை செலுத்தி, அனில் அம்பானியை நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை எரிக்ஸன் நிறுவனமும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தனது சகோதரர் முகேஷ் அம்பானிக்கும், அவரது  மனைவி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.  ”நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்று தக்க நேரத்தில் உதவியதற்கு  மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என அனில் அம்பானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close