பயங்கரவாதிகளை பந்தாடிய சிறுவனுக்கு ‛சௌர்ய சக்ரா’ விருது

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 01:02 pm
shourya-chakra-award-to-irfan-ramzan-sheik-who-defeated-terrorist-on-his-14-years-of-age

ஜம்மு - காஷ்மீரில், தன் வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகளை, அடித்து துரத்திய, சிறுவனுக்கு,  ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், சௌர்ய சக்ரா விருது வழங்கி, கவுரவித்தார். 

கடந்த, 2017 அக்டோபரில், ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த, இர்பான் ரம்ஜான் ஷேக் வீட்டிற்குள், மூன்று பயங்கரவாதிகள் நுழைய முயன்றனர். அவர்கள் தங்கள் கையில் பயங்கர ஆயுதங்களையும் வைத்திருந்தனர். 

பயங்கரவாதிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த, 14 வயது சிறுவன் இர்பான், அவர்கள் மீது பாய்ந்து, தன் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தான். உடனே சுதாரித்த, இர்பானின் தந்தை, தன் குடும்பத்தாரை, பயங்கரவாதிகளிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

அப்போது, இர்பான் மற்றும் அவனது தந்தையை, பயங்கரவாதிகள் தாக்க முற்பட்டனர். அதில், சிறு காயமும் ஏற்பட்டது. எனினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்த இரும்பு கம்பியால், பயங்கரவாதிகளை தொடர்ந்து தாக்கினான் இர்பான். அவனின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். 

14 வயதிலேயே, தன் வீரத்தால், பயங்கரவாதிகளை  விரட்டியடித்த, இர்பானுக்கு, மத்திய அரசு, சௌர்ய சக்ரா விருது அறிவித்தது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இர்பானுக்கு, சௌர்ய சக்ரா விருது வழங்கி கவுரவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close