கடனில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Mar, 2019 03:03 pm
government-calls-emergency-meet-as-jet-grounds-more-flights

ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்திற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 41க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்க முடியாமல் முடக்கி விட்டது. பல வழித்தடங்களில் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும் எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்பு செலவுகளை தாக்கு பிடிக்க முடியாமலும், கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் திண்டாடி வருவதாக தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், விமானப் போக்குவரத்து இயக்குநகரத்திற்கு, ஜெட் ஏர்வேஸ் விமான பராமரிப்பு பொறியாளர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றனர்.

அதில், தங்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால் பொறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, விமானப் பாதுகாப்பு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க அவசர ஆலோசனை கூட்டத்திற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close