அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: முக்கிய தகவல்கள் அடங்கிய டைரி மற்றும் பென் டிரைவ் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 02:01 pm
diary-pen-drive-reveal-agusta-kickback-trail

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், அப்ரூவராக மாறியுள்ள ஆயுதத்தரகர் ராஜீவ் சக்சேனா தன்னுடைய டைரி மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பென் டிரைவ்  ஆகியவற்றை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளார். 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த முறை மத்தியில் ஆட்சியில் இருந்த போது,  முக்கிய பிரமுகர்களின் உபயோகத்திற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், ரூ.423 கோடி லஞ்சம் என்ற பெயரில் பணமோசடி நடந்துள்ளது பின்னர் தெரிய வந்தது. 

இவ்வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும்,  இத்தாலி நாட்டு நீதிமன்றம்,  இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக தீர்ப்பு வழங்கியதையடுத்து, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தமும் கடந்த 2014 ஜனவரி மாதமே ரத்து செய்யப்பட்டது.

இவ்வழக்கில், இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, இடைத்தரகர்கள் ராஜீவ் சக்சேனா, சக்சேனாவின் மனைவி ஷிவானி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உறவினர் கிறிஸ்டியன் மிஷெல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் ராஜீவ் சக்சேனா ஆகிய இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும், கடந்த 6ம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் சக்சேனா அப்ரூவராக விரும்புவதாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் குறித்து நீதிபதி, அமலாக்கத்துறையிடம் கருத்துக் கேட்க, தங்களது எந்த ஆட்சேபனையும் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. அதையடுத்து இந்த வழக்கு குறித்த  விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாறியதால் வழக்கில் திருப்புமுனை ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அவர், தன்னுடைய டைரி மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பென் டிரைவ் ஆகியவற்றையும் அமலாக்கத்துறையிடம் அளித்துள்ளார். அதில், வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து துனிஷியா, மொரீஷியஸ், துபாய் மற்றும் ஸ்விஸ் வங்கிக்கு பணப்பரிமாற்றம் எப்படி நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் இருப்பதாகவும், யார் யாருக்கு, எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close