மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை - இளம்பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 10:24 am
kerala-young-girl-accusing-rape-in-marxist-communist-office

கேரள மாநிலம், பாலக்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாலக்காட்டில் கடந்த சில நாள்களுக்கு முன், சாலையோரம் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், அந்தப் குழந்தையின் தாயான, 20 வயது இளம்பெண்ணை கண்டறிந்தனர். அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த 10 மாதங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்றபோது, அங்குள்ள ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவருடைய பெயர் விவரங்களை வெளியிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிடம் இருந்து காவல்துறைக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close